Tuesday, 30 August 2016

மாதவச் சிவஞானமுனிவர்

அருள்திரு மாதவச்சிவஞானமுனிவர் அவர்களின் வரலாறு மற்றும் பாடல்கள் குறித்து எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறைப் இணைப்பேராசிரியர் முனைவர்.திருமதி.வே.செல்லாத்தாள் அவர்கள் எழுதிய உரைநூல்.

Dr.V.Chellathal one among the staff in Tamil Department of our college. She has written the book with detailed meaning about "ARUL THIRU MAATHAVA SIVA GNANA MUNIVAR". 







Monday, 29 August 2016

பிரெயில் நூல்கள் BRAILLE Books

அண்மையில் கோவை கொடிசியா அரங்கில் நடந்த புத்தக கண்காட்சியில் பார்வையற்றோருக்காக செயல்படும் நிறுவனம் மற்றும் அவை வெளியிட்ட நூல்களின் விலைப்பட்டியல் கிடைத்தது. இதனைப் படிப்பவர்கள் தங்களுக்குத் தெரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் இச்செய்தியினைப் பகிர்ந்து கொள்ளலாம்.







Wednesday, 24 August 2016


We have conducted an archaeological exhibition in our library on 21, 22, 23 and 24 of February 2016.  Many students from other colleges and schools, foreigners, outside people from neighbourhood villagers visited the exhibition and benefited.    





Tuesday, 23 August 2016

தேவாரம் THIRUGNANASAMBANDHAR THEVAARAM

14.05.2016 அன்று நமது கல்லூரியும் விஜயா பதிப்பகமும் இணைந்து நடத்திய திருஞானசம்பந்தர் தேவாரம் நூல் வெளியீட்டு விழாவில் பேரூராதீன குருமகாசந்நிதானங்களும் கல்லூரித்தலைவருமான சீர்வளர்சீர் பேரூரடிகளார் அவர்கள் நூலினை வெளியிட்டார்கள்.கல்லூரி முதல்வர் தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் அறிமுகவுரை வழங்கினார்கள்.  பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.ஆ.கணபதி அவர்கள் நூலினைப் பெற்றுக்கொண்டார்கள்.  சிரவை ஆதீன குருமகாசந்நிதானங்கள் ஆசியுரை வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு.ஆர்.மகாதேவன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். கல்லூரி நூலகத்திற்கு விஜயாபதிப்பக உரிமையாளர் திரு.வேலாயுதம் அவர்கள் நூல்களை வழங்கினார்.










S.R.RANGANATHAN எஸ்.ஆர்.ரங்கநாதன்


12th August - S.R.Ranganathan's Birthday Celebration -  Staff and students participated in this celebration its held in our library. Took the pledge and we remember his services. 

ஆகஸ்ட் 12 -2016 அன்று  நூலகவியலின் தந்தை என்று போற்றப்படும் திரு.  எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களின் பிறந்த தினம் நமது நூலகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவர்களும், அலுவலர்களும் கலந்து கொண்டனர்.








Saturday, 20 August 2016

PATRONS

தமிழ்க்கல்லூரியின் வளர்ச்சிக்கு வித்திட்ட சான்றோர்கள்

தவத்திரு ஆறுமுக அடிகளார் அவர்கள்


இந்தியாவின் முதல் நிதியமைச்சர்
திரு.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்கள்

                         கோவைகிழார் திரு.கோ.ம.இராமச்சந்திரன் செட்டியார்

வெள்ளகிணறு நிலக்கிழார்.
சைவத்திரு.வெ.சி.சுப்பையா கவுண்டர் அவர்கள்

அருட்செல்வர்
திரு.நா.மகாலிங்கம் அவர்கள்


நீதியரசர்.திரு.
இரா.செங்கோட்டுவேலன் அவர்கள்












Friday, 19 August 2016

Founder & Chairman கல்லூரியின் நிறுவனர் - தலைவர்

பேரூர்த் தமிழ்க்கல்லூரியின் நிறுவனரும் கல்லூரித் தலைவருமான திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீன குருமகாசந்நிதானங்கள் முதுமுனைவர் கயிலைக்குருமணி
சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்கள்

Tuesday, 16 August 2016

இறைவணக்கம்

இன்பமாயது  அறாதுஇடை ஓங்கவும்
துன்பம்ஆயது  தூரத்துள்  நீங்கவும்
முன்ப ராபரன்  மொய்குழ  லோடுஅணைந்து
அன்பின் ஈன்றஓர்  ஆணையைப் போற்றுவாம்.